கணனிக் கட்டுரைகள் - 12 

--------------------------------------------------------------------------------

"IP Address" என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா? 

"ஐபி முகவரிகள் என்பது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளை
அடையாளம் கண்டு தொடர்புகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் தரப்படும்
எண்களாலான முகவரி" எடு. "195.194.234.345"

IP எனபது INTERNET PROTOCOL என்பதின் சுருக்கமாகும்.

இதுபற்றி எனது முதல் கணினிக்கட்டுரையிலே மேலோட்டமாக தெரிவித்திருக்கிறேன்
இணையம் என்னும் வலையமைப்பில் மிக அதிக என்னிக்கையிலான கணினிகள்
இணைக்கப்பட்டுள்ளன, இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அனைத்தும்
தங்களுக்கென ஒரு IP Addressஐக் கொண்டுள்ளன, இத்தகைய IP Addressஐப்
பயன்படுத்தியே தங்களை பிற கணினிகளோடு இணைத்து தகவல் பரிமாற்றத்தை
நிகழ்த்த முடிகிறது. இவை தனிச்சீர்மை பெற்றவை அதாவது ஒரு IP Addressஐ,
இரண்டு கணினிகள் கொண்டிருக்கமுடியாது ஒரு கணினிக்கு ஒரு முகவரி மட்டுமே
இருக்கும்.

இணையத்தில் பல பரிமாரிக்கணினிகள் (server) நிறுவப்பட்டுள்ளன அவைகளுக்கு
என்று தனியான நிரந்தர IP Address கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இவை
இருபத்து நான்கு மணி நேரமும் தகவல் பரிமாற்ற வேலையைச்செய்து கொண்டிருக்கும்.
இத்தகைய கணினிகளின் IP Address கள் எப்பொழுதும் மாறாதவை. அதுபோல
Internet Service Provider (ISP) என்னும், இணைய இணைப்பை பொதுமக்களுக்கு
வழங்குபவர்களது கணினியும் இவ்வாறே தனக்கொண தனியானதொரு IP Addressஐக்
கொண்டிருக்கும்.

IP முகவரிகளின் அமைப்பைப்பார்த்தோமெனில் அவை வெறும் எண்களால் ஆனவை
ஆனால் அவை நான்கு பிரிவுகளில் மூன்று எண்களைக்கொண்டு இருக்கும்
ஒவ்வொரு மூன்று எண்களுக்கும் இடையில் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டிருக்கும்.
அதாவது 000.000.000.000 என்ற வடிவத்தில் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்
எடுத்துக்காட்டாக அமீரகத்தில் உள்ள பரிமாரிக்கணினியின் IP Addressஆவது
194.170.1.6 மற்றும் 194.170.1.7 ஆகும். இவை என்றும் மாறாதவை. இவற்றின்
மூலமே இங்குள்ள பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் இணைய இணைப்பு வழங்குபவருடைய பரிமாரிக்
கணினியின் மூலம் அந்நாட்டில் உள்ள மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு நாம் இத்தகைய பரிமாரிக்கணினியில் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த
இணைப்பு இருபத்து நான்கு மணி நேரமும் அப்படியே இருக்கப்போவது இல்லை
நாம் விரும்பிய நேரங்களில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பயனீட்டாளர் பெயர் மற்றும்
கடவுச்சொல்லைப்பயன்படுத்தி அவ்வப்பொழுது நமது கணினியை இணையத்தில் இணைத்துக்
கொள்கிறோம். அவ்வாறு இணைத்துக்கொள்ளும் பொழுது மட்டுமே நமது கணினி
இணையத்தில் இணைந்திருக்கிறது. இவ்வாறு இணைந்திருக்கும் பொழுது நமக்கு என்று
ஒரு IP Address இருந்தால் தான் நம்மால் பிற கணினிகளுடன் உறவாட முடியும்
எனவே ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் நமது கணினியை இணைத்துக்
கொள்ளும்பொழுது நமக்கு இணைப்பைத்தரும் பரிமாரிக்கணினி ஒரு IP Address
ஐயும் தருகிறது. இந்த IP Address நிலையானது அல்ல. நாம் இணையத்தொடர்பைத்
துண்டித்துக்கொண்டால் அத்துடன் அந்த முகவரியும் பயனிழந்துவிடும்.

ஆக ஒவ்வொரு முறையும் நாம் இணையத்தில் இணையும் பொழுது நம்மை
இணைக்கும் பரிமாரிக்கணினிகள் ஒவ்வொரு முறையும் ஒரு IP Address உறுவாக்கி
நமது கணினிக்குத்தருகின்றன. அந்த முகவரியைப் பயன்படுத்தியே நாம் இணையத்தில்
தற்காலிகமாக உலாவருகின்றோம். இவை ஆங்கிலத்தில் Randomly generated IP Address
என்று சொல்லப்படுவது உண்டு.

இவ்வாறு ஏதாவது ஒரு IP Address ஐ உறுவாக்கும் பொழுது அந்த பரிமாரிக்கணினி
தன்னுடைய் நிலையான முகவரியை மையமாகவைத்து அதனை உருவாக்குவதுதான்
இங்கு சிறப்பம்சம். எடுத்துக்காட்டாக அமீரகத்தில் என்னுடைய கணினியை இணையத்தில்
இணைக்கிறேன் என்றால் என்னுடைய கணினிக்கு IP Address ஒதுக்கும்பொழுது அந்த
சமயத்தில் அதாவது நான் இணைய இணைப்புக்குள் வரும் சமயத்தில்யாருக்கும் ஒதுக்காத
எண்ணாகவும், அதேசமயத்தில் அதனுடைய நிலையான எண்ணின் முதல் பகுதியை
மையமாக வைத்தே அது உருவாக்கப்படும்

எடுத்துக்காட்டாக எனது பரிமாரியின் IP Address - 195.229.24.46 என்று கொள்க
எனக்கு ஒதுக்கும் எண்ணானது ஒவ்வொருமுறையும் 195 உடன் துவங்கும் எண்ணாகவே
இருக்கும். இதனை வலையமைப்பு எண் என்று கூறுவர் இது சில நாடுகளுக்கு அல்லது
ஒரு பெரிய வலையமைப்புக்குச்சொந்தமாக(இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கிற) இருக்கும்.

நாம் மடல்கள் எழுதும்பொழுதும், இணையத்தில் உலாவரும்பொழுதும் நமக்கென்று தரப்-
பட்டிருகிற ஐபி முகவரிகளைக்கொண்டே தொடர்புகொள்ளுகிறோம். அதனால் நாம்
அனுப்பும் மடல்கள் இந்த ஐபி முகவரிகளை கொண்டு எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை
அறிந்துகொள்ளமுடியும். இதிலும் நான் ஏற்கனவே கூறியதுபோல இத்தகைய முகவரிகள்
அவ்வப்பொழுது உருவாக்கப்படுவதும், இணையத்தில் இருந்து வெளியேரும்பொழுது அழிக்கப்
பட்டுவிடுவதுமாக இருப்பதால் நாம் எழுதும் மடல்களை வைத்து அவை எங்கிருந்து
அதாவது எந்த நாடு, இணையத்தின் எந்த வலையமைப்பில் அதாவது யார் வழங்கிய
இணைய இணைப்பில் (VSNL, Sathyam infoway, Emirates Internet) இருந்து எழுதுகிறோம்
என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இன்னார் தான் எழுதினார் என்பதை
அறிந்துகொள்ள முடியாது. அவ்வாறு அறிந்துகொள்வதற்கு அந்த பரிமாரியானது எந்த
சமயத்தில் யார் யார் எந்த ஐபி முகவரிகளைப்பயன்படுத்தியிருந்தனர் என்பதை சேமித்து
வைத்திருக்குமாயின் அதிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Back