கணனிக் கட்டுரைகள் - 11 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விண்டோஸ் 2000ல் தமிழ் - ஒரு சகாப்தம் 

விண்டோஸ் NT தொழில்நுட்பத்தில், இதுவரை வெளிவந்திராத வசதிகளை உள்ளடக்கிய,
இணையம் மற்றும் பிற செயலிகளையும் பயன்படுத்த ஏதுவாக, இணையத்தில் உள்ளதுபோல
மிகக்கடினமான பாதுகாப்பு அரண்களுடன் உருவாக்கப்பட்ட, தொழில்,வாணிப வசதிக்கேற்ற
அடுத்த தலைமுறைக் கணினிகளின் வினைக்கலன்(Operating System) அல்லது வினைத்தளம்"
என்று இந்த விண்டோஸ் 2000 பற்றி அறிவிக்கிறது மைக்ரோசாப்ட் கார்பொரேசன்.

உலகின் முதல் தர மென்பொருள் தயாரிப்பாளருள் முதலிடம் வகிக்கும் அமெரிக்க
நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்பொரேசன் (Microsoft Corporation), தன்னுடைய விண்டோஸ்
வினைக்கலன் வரிசையில் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய "விண்டோஸ்2000"
என்னும் வினைக்கலனை வெளியிட்டுள்ளது. புத்தாயிர மாண்டின் துவக்கத்தில் வெளியிடப்
பட்டுள்ளதால் இதுவும் 2000 என்னும் ஆண்டை உள்ளடக்கியதாகப் பெயரிடப்பட்டுள்ளதில்
ஆச்சரியம் ஏதும் இல்லை.

இந்நிறுவனம் இதற்குமுன்பு தன்னுடைய விண்டோஸ்95 விண்டோஸ்98 மற்றும் விண்டோஸ்NT
போன்ற வினைக்கலன்கள்(Operating System) மற்றும் பல தேவைகளுக்கான மென்பொருள்களை
(software) யும் உருவாக்கி வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தற்காலத்தில் உலகின் தனிக்
கணினி (personal computer) உபயோகிப்பாளர்களில் என்பதுக்கும் அதிகமான சதவிகிதத்தினர்
இநிறுவனத்தின் விண்டோஸ் சார்ந்த செயலிகளையே உபயேகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாது பலர் கணினி என்றாலே நாம் பயன்படுத்தும் IBM வகைக் கணினிகள்
மட்டும்தான், அதில் பயன்படுத்துவதற்கு மென்பொருள்கள் என்றாலே விண்டோஸ் தவிர வேறு
ஏதும் இல்லை என்று எண்ணும் அளவிற்கு அதனுடைய விண்டோஸ் வினைக்கலன்கள் பிரசித்தம்
பெற்றுள்ளதோடு, அனைத்து நாடுகளிலும் அனைத்து வேலைகளிலும் அனைத்து வகைக்
கணினிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பிப்ரவரிமாதம் 17 ம் நாள் உலகின் பல நடுகளில் விண்டோஸ்2000
வினைக்கலன் ஒரே நேரத்தில் ஏறபாடு செய்யப்பட்ட விழாக்களில் வெளியிடப்பட்டது.
அதன் அடுத்தகட்டமாக அந்நிறுவன ஊழியர்கள் அங்கு விழாவிற்கு வருகைதந்து
குழுமியிருந்த கணினி வல்லுனர்களுக்கு அதை இயக்கும் விதமும் மற்றும் அதன்
குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் எத்தனை விதமன வெளியீடுகள் போன்ற தகவல்களை
விளக்கிக்கூறினர். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் சுருக்கமாகக் காண்போம்.

இந்த விண்டோஸ் 2000 மூன்று தனிவெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளது அவைகளாவன

1. விண்டோஸ் 2000 (Windows2000 Professional)

இது தனிக்கணினிகளிலும், மடிக்கணினிகளிலும்(laptop computers) பயன்படுத்தும் வகையில்
உறுவாக்கப்பட்டுள்ளது இதில் இணையத்தை(Internet) பயன்படுத்துபவர்களுக்கும் மற்றும்
கைகளில் எடுத்துச்செல்லும்(Mobile Computers) சிறு கணினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கும்,
அதன்மூலமே இணையத்தை தான் செல்ல்லும் இடங்களுக்கு எடுத்துச்செல்பவர்களுக்கும்
இவ்வெளியீடு மிக அதிக வசதிகளை அளிக்கிறது. அதுமட்டுமல்லாது விண்டொஸ் 98ஐப்
போல கட்டளைகளை கொடுக்கும் முறை பயன் படுத்தப்பட்டுள்ளதால் நாம் இதனைப்
பயன் படுத்துவதற்கு என்று தனியாக படிக்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த
வெளியீட்டைப்பயனபடுத்த நமது கணினியின் குறைந்த பட்ச தேவைகளாவன

133 MHz வேகம் கொண்ட பெண்டியம் வகை சிப்புகள்
64 MB இராம் நினைவகம்
1 GB வண்தட்டு(Hard Disk)


2. விண்டோஸ்2000 பரிமாறி (Windows2000 Server)

இது வலையமைப்பில்(Network) பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுளது, சாதாரணமாக
நமது அலுவலகங்களில் பயன்படுத்தும் உள்ளிட வலையமைப்புக்கு ஏற்றவாறு விண்டோஸ்NT
வலையமைப்பு விணைக்கலனின் முன்னேற்றங்களுடன் கூடிய தொகுதியாக அமைக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் நாம் கணினிகளை இணைப்பதால், பிரிண்டர்கள் மற்றும் கோப்புகளை நாம்
பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாது இணையத்துடன் இந்த உள்ளிட
வலையமைப்பை இணைத்து உள்ளிட(Intranet) இணையத்தை உருவாக்கவும் முடியும்

இதற்கான குறைந்தபட்ச கணினி வண்பொருள்களின் (Hardware) தேவை

133 MHz வேகம் கொண்ட பெண்டியம் வகை சிப்புகள்
256 MB இராம் நினைவகம்
1 GB வண்தட்டு(Hard Disk)

3. அதிநுட்ப விண்டோஸ்2000 பரிமாரி(Advanced Windows2000 Server)

இதுவும் வலையமைப்பில் சர்வராக அதாவது தகவல் பரிமாறுத் தளமாக பயன்படும்
வினைக்கலத்துக்கும் தற்காலத்தில் தொழில் வாணிப தொடர்புகள் இணையத்தில்
அதிகரித்து விட்ட வேலையில் "இணைய வாணிபம்" (e-commerce) முழுமையாக
உலகை ஆக்கிரமித்துக்கொண்ட சூழலில் இந்த வினைக்கலன் இத்தகைய வாணிபத்திற்கு
பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் தங்களது இணையத்
தகவல் தளக்கணினியில் பயன்படுத்திக்கொள்வதற்கு உதவும். இதற்கான குறைந்தபட்ச
கணினி வண்பொருள்களின் (Hardware) தேவையும்,

133 MHz வேகம் கொண்ட பெண்டியம் வகை சிப்புகள்
256 MB இராம் நினைவகம்
1 GB வண்தட்டு(Hard Disk)

பன்மொழிப் பயன்பாட்டுப் பதிப்புகள் (Multilanguage versions of Windows2000)

இங்கு நான் மேற்கூறிய மூன்றுவகை விண்டோஸ்2000 வெளியீடுகளிலுமே மைக்ரோசப்ட்
நிறுவனம் பலமொழிகளில் பயன்படுத்து வசதியை அளித்துள்ளது. ஆகவே நாம் கணினிகளை
இயக்க ஆங்கிலத்தை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய அவசியமில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் பல மொழிகளைத்தனது விணைக்கலனில்(Operating System)ல்
பயன்படுத்துவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே வெளிவந்த விண்டோஸ் 95 மற்றும்
விண்டோஸ் 98 இரண்டிலுமே பன்மொழிப் பயன்பாட்டை அது ஏற்படுத்தியிருந்தது. இந்திய
மொழிகள் எதிலும் இதுவரை இத்தகைய விணைக்கலன்கள் எழுத்தப்படாதிருப்பது நமது
துரதிர்ஷ்டமே என்று கொள்ளவேண்டும் ஏனெனில் மிகக்குறைந்த மக்களே பேசும் சில
ஐரோப்பிய மொழிகளில் கூட மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் வினைக்கலன்களை எழுதி
அளித்திருக்கிறது அதற்கு காரணம் அங்கெல்லாம், மக்கள் மிகக்குறைவாக அம்மொழிகளைப்
பேசினாலும் மிக அதிகமாக கணினிகளை அவர்கள் உபயோகித்து வருகிறார்கள் எனபது தான்.
இவ்வாறு வேறுமொழியில் கட்டளைகளைக் கொடுத்து அதன்மூலம் கணினியை இயக்குவதைப்
பற்றி நாம் அறிந்திராததாலும் அதற்கான வாய்ப்பு இதுவரைக்கும் நமக்கு ஏற்படாததாலும்
கணினி என்றாலே ஆங்கிலம் தெரிந்திருந்தால் தான் என்ற நிலை சராசரி இந்தியர்கள்
மத்தியில் பரவலாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

சார்ஜாவில்...

இங்கு நான் வேலைபார்த்துவரும் சார்ஜா நகரத்தை எடுத்துக்கொண்டோமேயானால் இங்கு
அரசு சார்ந்த எந்த ஒரு வேலையானாலும் அது அரபிமொழியில் தான் இருந்தாகவேண்டும்.
அரசு அலுவலகங்களும் அதுசார்ந்த பிற தனியார் நிறுவனங்களின் அரசுசார் தொடர்புகளும்
அரபியில் மட்டும் தான் செய்யப்படுகின்றன, செய்யப்படவேண்டும். அதுமட்டுமல்லாது இங்கு
எந்த ஒரு அலுவலகத்திற்குச் சென்றாலும் கணினிகள்தான் முழுஅளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு கணினியில்லையேல் எந்தஒருவேலையும் நடக்காது. இந்நாட்டு குடிமக்களுக்கு ஆங்கில
மொழி அறிவு மிகக்குறைவு,அப்படி இருந்தும் இங்கு அலுவலகங்களில் தாள்களில் எழுதும்
பழக்கம் மிகவும் குறைவு. அனைத்துவேலைகளும் கணினியிலேயே அதுவும் அரபி மொழியிலேயே
செய்யப்படுகின்றன. இது எப்படி சாத்தியப்படுகிறது?

அதற்குகாரணம், இங்கு சில ண்டுகளுக்கு முன்பே அரபியில் முழுமையாக இயங்கும் கணினி
மென்பொருள்கள் வழக்கில் வந்துவிட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 95
விணைகலனிலேயே முழுமையாக அரபியில் கையாலும் வசதியை செய்து அளித்தது. இங்கு
அரபியில் பயன்படுத்துதல் என்றால் அரபியில் எழுதுவது என்று அர்த்தம் கொள்ளவேண்டாம்.
நீங்கள் விண்டோஸ் 95 புரோகிராமை இயக்கினால் Start பட்டன் இருப்பது போல அரபி
மொழியில் வரும் விண்டோஸ் 95ல் அது அரபிமொழியில் வரும், அதுபோல எந்த ஒரு மெனுவாக
(Menu) இருக்கட்டும், Dialog box களாக இருக்கட்டும் அவை முழுவதும் அரபியிலேயே இருக்கும்
எனவே ஒருவர் ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடுகிறது.

அதுபோலவே விண்டோஸ்2000 விணைக்கலனிலும் இவ்வாறு பன்மொழிப்பயன்பாட்டு வசதியை
மற்ற வெளியீடுகளைவிட அதிகமாக அளித்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அது தனது
விண்டோஸ்2000ல் மொழி வாரியாகவும் மூன்று வெளியீடாக வெளியிட உள்ளது.


1. முழுதும் ஆங்கிலத்தில் இயங்கும் விண்டோஸ்2000 (English version)

இது ஏற்கனவே வெளிவந்துவிட்டது இதில் ஆங்கிலம்தான் கட்டளைப்பயன்பாட்டு மொழியாகப்
(User Interface language) பயன் படுத்தப்படுகிறது. இது நாம் விண்டோஸ்95/98 களைப்
பயன்படுத்துவது போல இருக்கும். கோப்புகளின், கோப்பகங்களின்(Directory) பெயர்கள்
மெனுக்கள் ஆகியன ஆங்கிலத்தில் தான் இருக்கும். ஆயினும் கூட இது பிற 100க்கணக்கான
மொழிகளின் எழுத்துக்களை பயன் படுத்த ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதால் நாம் அம்மொழிகளின்
எழுத்துக்களை(Fonts) இதில் வேறு ஏது மென்பொருளின் உதவியின்றி இலகுவாகப் பயன்
படுத்தமுடியும் அதிலும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள மிகக் கடினமான எழுத்துமுறையான
நமது தமிழ், ஹீப்ரு மொழி, அரபிமொழி, இந்தி மொழி தாய்(தாய்லாந்து நாட்டு)மொழி
போன்றவற்றில் எழுதுவதற்கான வசதிகளும்கூட செய்யப்பட்டுளளன.

2. முழுதும் அந்தந்த பிராந்திய மொழியில் இயங்கும் விண்டோஸ்2000 (Localized version)

முழுவதும் பிராந்திய மொழிகளிலேயே இயங்கும் விதத்தில் ஆங்கிலம் தவிர்த்த 23 மொழிகளில்
இந்த விண்டோஸ்2000 வரவிருக்கிறது இதில் கட்டளைப் பயன்பாட்டு மொழியாகவும் அம்மொழியே
இருக்கும். அவ்23 மொழிகளைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1. ஜெர்மன் 2. ஜப்பானியமொழி 3. சீனமொழி(எளிதுபடுத்தப்பட்ட) 4.சீனமொழி(பாரம்பரிய)
5. கொரியமொழி 6. ஃப்ரென்ச் மொழி 7. ஸ்பானிஷ் மொழி 8. ஸ்வீடன் மொழி
9. டச்சு மொழி 10. செக்மொழி 11. ஹங்கேரிமொழி 12.போலந்துமொழி 13. ரஷ்ய மொழி
14. இத்தாலிமொழி 15. பிரேசில்மொழி 16. போர்ச்சுக்கல் மொழி 17. துருக்கி மொழி
18. கிரேக்கமொழி 19. அரபிமொழி 20. ஹீப்ருமொழி 21. டானிஸ்மொழி 22. பின்னிஸ்மொழி
23. நார்வேயன்மொழி.

இவ்வினைக்கலன்களில் எடுத்துக்காட்டாக ஜப்பான் மொழி வெளியீட்டில் நாம் ஜப்பான் மொழி
எழுத்துக்களிலேயே மெனு, dialogbox, கோப்புகளின் மற்றும் கோப்பகங்களின் பெயர்கள்
போன்றவை இருக்கும். அதுமட்டுமல்லாது பிராந்திய அமைப்பில் அதனுடைய மாதங்களின் பெயர்கள்,
நாட்களின் பெயர்கள், தேதியைப்பயன்படுத்தும் அமைப்பு(நாள்-மாதம்-வருடம் அல்லது வருடம்-
மாதம்-நாள்) பணத்தின் பெயர் போன்றவைகளும் இத்துடன் அடங்கும். இந்தகைய வெளியீட்டிலும்
நீங்கள் பிற மொழி எழுத்துக்களை எடிட்டர் செயலிகளில் பயன் படுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது
எடுத்துக்காட்டாக ஜப்பான் மொழி யில் இயங்கும் விண்டோஸ்2000ல் உள்ள word pad செயலியில்
தமிழிலோ, அல்லது அரபியிலோ அல்லது இரஷ்யா மொழியிலோ நாம் எழுதமுடியும். இந்த
பிராந்தியப்படுத்தப்பட்ட வெளியீடு இன்னும் நான்கு மாதங்களில் வெளியிடப்பட இருக்கின்றன.

3. பண்மொழிப்பயன்பாட்டு வெளியீடு(Multilanguage Version of WIndows2000)

இது விண்டோஸ்2000 ல் வரும் மிகப்பெரிய வசதியாகும் இந்த வெளியீட்டைய் நீங்கள் உங்களது
கணினியில் ஏற்றிவிட்டால் போதும் எப்பொழுதுவேண்டுமானாலும் நான் மேற்கூறிய 23 மற்றும்
ஆங்கிலம் சேர்த்து 24 மொழிகளில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். 23
மொழிகளும் ஒன்றாகச்சேர்ந்த ஒரு கலப்பாக இந்த வெளியீடு இருக்கும். இதில் முதன்மை
மொழியாக ஆங்கிலமே இருக்கும். ஆங்கிலத்தில் தான் அந்த வினைக்கலனை ஏற்றும்
(Installation facility) வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும்.

இவ்வாறு 24 மொழிகளையும் ஒரே விண்டோஸ்2000த்தில் பயன்படுத்த வேண்டுமெனில் முதலில்
ஏற்றப்படும் ஆங்கில பிரதியைத்தவிர்த்து ஒவ்வொரு மொழிக்கும் கூடுதலாக 45 MB (23*45 MB)
அளவுள்ள நிரல்கள்(Programs) நமது வண்தட்டில் ஏற்றப்படும் நீங்கள் 24 மொழிகளும்
தேவையில்லை எனக்கு நான்கு மொழியில் செயல்பட்டால் மட்டும் போது என்றாலும் அவ்வாறு
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மொழிகளை மட்டும் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. நீங்கள்
விண்டோஸ்2000ஐ கணினியில் ஏற்றும்பொழுது ரஷிய மொழிக்கான பகுதியை ஏற்றாமல்
விட்டுவிட்டால் பின்னர் ரஷிய மொழியில் நீங்கள் கணினிக்கு கட்டளையிட முடியாது.

முறையாக விணைக்கலன் ஏற்றப்பட்டபிறகு நாம் இந்த 24 மொழிகளுக்குள் எம்மொழியில்
பயன்படுத்தவேண்டுமானாலும் அம்மொழிக்கு மாற்றிக்கொண்டுவிடலாம் இதில் நீங்கள் சீன
மொழியில் மாற்றி அமைத்துவிட்டால் கட்டளைமொழியாக சீன மொழிக்கு மாறிவிடும். ஒரு
ஜெர்மனிக்காரர் அதைப்பயன்ப்டுத்த எளிதாக அதன்கட்டளைமொழியை ஜெர்மன் மொழிக்கு
மாற்றிக்கொள்ளலாம். இத்தகைய வசதி மைக்ரோசாப்ட் பீஸ் செயலியில் ஏற்கனவே உண்டு
ஆனாலும் இத்தனை மொழிகளுக்கு அல்ல. இரண்டு மொழிகளில்(ஆங்கிலம், அரபி) வந்து
நான் பயன்படுத்தி இருக்கிறேன் ஆனால் இங்கு இது வினைக்கலனில் பயன்படுத்தப்படுகிறது
அதுவும் 24 மொழிகளில். வளர்ந்து வரும் கணினி சார்ந்த வியபாரம், தொழில் மற்றும்
வாணிபத்தொடர்புகளில் பலமொழிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவரும் இவ்வேலையில்
இத்தகைய பன்மொழி விணைக்கலன்கள் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும்
இவ்விணைக்கலன்களின் பரிமாறி வெளியீட்டை(Server Version ofWindows2000)
பயன்படுத்தும்போது அதனோடு வலையமைப்பில்(Network) இனைந்துள்ள கணினிகளில்
ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த கட்டளை மொழியைப்பயன்படுத்தி வேலைசெய்யமுடியும்.
அத்தகைய பரிமாறிக்கணினி(server) களுடன் வலையில் இணைக்கப்பட்டுள்ள வெவ்வேறு
நாட்டுக் கணினிகளிருந்து ஒவ்வொரு மொழிக்காரரும் அவரவர் விரும்பிய (24 மொழிகளுக்குள்)
மொழியில் தரும் கட்டளைகளை அப்படியே ஏற்று ஆவன செய்கிறது.

விண்டோஸ்2000ல் தமிழ்.

"விண்டோஸ்2000 ல் தமிழைப்பயன்படுத்தும் வசதி"
இது நாம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி!. விண்டோஸ்2000ல், இந்திய
மொழிகளில் ஐந்து மொழிகளைத் தேர்ந்தெடுத்து அதனுடைய எழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கும்,
மற்றும் அம்மொழிப்பிராந்திய தகவல்களை கனினியில் ஏற்றிப் பயன் படுத்துவதற்குமான வசதியை
மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்துள்ளது. இவ்வாறாக உலகளவில் மொத்தம் 126 மொழிகளைப்
பயன்படுத்த இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த 126 மொழிகளும் 17 மொழிக்குழுமத்திற்குள்
அடக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்த ஒரு மொழியைப் பயன்படுத்தவேண்டுமானாலும் நாம் அந்த
மொழிக்குடும்பத்திற்கான மென்பொருள் தொகுதியை விண்டோஸ்2000னுடன் சேர்த்து நமது
கணினியில் ஏற்றவேண்டும்.

உதாரனமாக தமிழ், மராத்தி,கொங்கனி, ஹிந்தி,சமஸ்கிருதம் கியவற்றில் ஒன்றைப்
பயன்படுத்த விண்டோஸ்2000னுடன் வெளிவரும் அதனுடைய மொழிகுழுமமாகிய I N D I C
என்பதற்கான மென்பொருள் தொகுதியையும் நாம் விண்டோஸ்2000 உடன் சேர்த்து நமது
கணினியில் ஏற்றவேண்டும். அப்பொழுதுதான் நாம் இவ்வைந்து மொழிகளையும் விண்டோஸ்2000ல்
பயன்படுத்தமுடியும். அவ்வாறு ஏற்றவில்லையெனில் நாம் இந்த மொழிகளை பயன்படுத்தமுடியாது
போகும். மேலும் இங்கு கட்டளைகளை ஆங்கிலத்திலோ அல்லது பிற மேற்கூறிய 23 மொழிகளிலும்
தான் கொடுக்க முடியும் தமிழைப்பயன் படுத்தி கட்டளைகளைப் பிறப்பிக்க முடியாது.

இப்பொழுதும் நாம் விண்டோஸ்95 மற்றும் விண்டோஸ் 98 களில் தமிழைப் பயன்படுத்தி
வருகிறோம் அதற்கு நாம் தனியாக எழுதப்பட்ட விசைப்பலகை இயக்கிகளையும்(Keyboard
Driver Software) தமிழ் எழுத்துவடிவங்களையும்(fonts) பயன்படுத்திவருகிறோம்
எடுத்துக்காட்டாக முரசு அஞ்சல், மற்றும் கீமேன் தமிழ்ச்செயலி போன்றவற்றைக்கூறலாம்.
இனிமேல் நாம் அவ்வாறு பிற எழுத்துருக்களையும்(fonts) பிற செயலிகளையும்(programs)
பயன்படுத்தாமல் நேரடியாகவே விண்டோஸ்2000ல் தமிழில் எழுதமுடியும். மேலும் மைக்ரோ சாஃப்ட் இணையச்செயலியும் (Microsoft Internet Explorer)தமிழில் இணையப் பக்கங்களைப்
பார்வையிட வகைசெய்யும் வசதிகளை கொண்டிருக்கும்.

மேலும் நாம் தமிழ் மாதங்கள், தமிழில் வார நாள்கள் மற்றும் நம்முடைய தேதி அமைப்பு
ஆகியனவற்றை நமது கணினியில் ஏற்றிப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேசிய கவி பாரதி
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கேட்டுக்
கொண்டதிற்கினங்க நம் "தமிழ்" இணையத்தில்(Internet) மிக வேகமாக வளர்ந்து வருகிறது,
இன்று இணையத்தில் 75000 தமிழ்சார்ந்த வலைத்தளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது
இதில் 25000 தமிழ்மொழியையே பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன, இணையத்தில் தோன்றிய
முதல் இந்திய மொழி என்ற பெருமையும், அதிக வலைத்தளங்களைக்கொண்ட ஒரே இந்திய
மொழி என்ற பெருமையையும் நாமே கொண்டுள்ளோம். இஃது மேன்மேலும் சிறக்கும் வண்ணமும்
தமிழ் உலகின் புகழ் உச்சிக்கு ஏறும் வணணமும் விண்டோஸ்2000ல் தமிழ் பயன்பாடு இருக்கும்
என்று நம்பிக்கைகொள்வோமாக.

வெல்லத் தமிழ் இனி வெல்லும்
-மலேசியக் கவிஞர் திருவரசு. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Back