கணனிக் கட்டுரைகள் - 1 


ஒரு வலைப்பக்கத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும்போது அந்தத்தகவல்கள் எவ்வாறு
உங்கள் கணிப்பொறிக்கு கொண்டுவரப்படுகிறது என்று உங்களுக்குத்தெரியுமா? 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் உங்களது மேய்ப்பானில்(browser - Netscape communicatior or Internet
Explorer) எந்த வலைப்பக்கத்திற்கு போகவேண்டுமோ அதன் முகவரியை(URL) எழுதி என்டர் கீயை தட்டியவுடன் உடனே உங்களது கணினி அந்த வலைப்பக்கம் உள்ள (server-வலைப்பக்கங்கள் மற்றும் தகவல்களச் சேமித்து வைத்து, வேண்டுதல்களின் பேரில் பிற கணினிகளுக்கு அளிக்கும் கணினி) serverருடன் தொடர்புகொள்கிறது. 

எடுத்துக்காட்டாக தாங்கள் இந்து பத்திரிக்கையின் முகவரியை எழுதி என்டர் கீ¬ தட்டினால் அது அந்த வலைப்பக்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் கணினிக்கும், 'இந்து செய்தித்தாள் வலைப்பக்கங்கள்' சேமித்து வைக்கப்பட்டிருக்கிற கணினிக்கும் ஒரு தொடர்பை உண்டாக்கும் இது TCP/IP (Transmission control protocol /Internet Protocol) என்ற ஒரு மென்பொருள் மூலம் சாத்தியப்படுகிறது.


இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் ஒவ்வொன்றுக்கும் IP Address என்ற ஒரு unique முகவரி அல்லது எண் தரப்பட்டிருக்கும் அதைக்கொண்டே உங்கள் கணினியும், "இந்து செய்தித்தாள்" சேமிக்கப்பட்டிருக்கிற கணினியும் தொடர்பு கொள்கின்றன. அதன்பின் அந்த வலைப்பக்கத்தில் உள்ள செய்திகள் அனைத்தும் சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டப்பட்டு (Packets) அங்கிருந்து உங்களது கணினியை நோக்கி அனுப்பப்படுகின்றன. அந்த ஒவ்வொரு பெட்டலமும் அதனுல், சிறிது தகவல்களையும், எந்த கணினிக்கு அது எடுத்துச்செல்லப்படுகிறதோ அந்த கணினியின் IP Address ஐயும் அது எத்தனையாவது பொட்டலம் என்ற தகவலையும் மொத்தம் எத்தனை பொட்டலங்கள் என்ற தகவலையும் எடுத்துக்கொண்டு இணைய வலைபின்னலுக்குள் அனுப்பப்படுகின்றன.


இங்கே எந்த வழியாகச் சென்று அவை உங்கள் கணினியை அடைகின்றன என்று கேட்டால் நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். ஒவ்வொரு பொட்டலமும் தான் விரும்பிய பாதையில் பயனம் செய்து தான் போய்ச்சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்கின்றன. (இந்த பொட்டலங்கள் 'Router' என்றும் கருவிகளின் உதவியோடு வழிநடத்தப்படுகின்றன) எடுத்துக்காட்டாக, தாங்கள் துபை(Dubai)நகரிலிருந்து இந்து செய்தித்தாளை வேண்டினால் அது உதாரணத்திற்கு சென்னையில் சேமித்துவைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டால் அது சில பொட்டலங்கள் மும்பை வழியாக துபைக்கு வரலாம்,சில அப்படியே பாக்கிஸ்தானுக்குள் போய் அங்கிருந்து ஈரானுக்குள் நுளைந்து, சில அப்படியே வேறு நாடுகளைச்சுற்றி ஒவ்வொன்றாக உங்கள் கணினியை அடைகின்றன.


உங்கள் கணினி அந்தப்பொட்டலங்கள் ஒவ்வொன்றாக வரவேற்று அதைப்பிரித்து அதனுல் உள்ள தகவல் களை எடுத்துக்கொண்டு இந்தப்பொட்டலம் சரியாக வந்து சேர்ந்து விட்டது என்று அந்த "இந்து" கணினிக்கும் தகவல் சொல்கிறது. சில சமயங்களில் சில பொட்டலங்கள் வந்து சேரத்தாமதம் ஆகிவிடுவதும் உண்டு. அதனால் உங்கள் கணினி அந்த பொட்டலத்தின் வருகைக்காக வெகுநேரம் காத்திருக்கும்படி ஆகிவிடுவதும் உண்டு. இந்தத்தகவல்கள் அனைத்தும் சிறுசிறு பொட்டலங்களிலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு http அதாவது Hyper Text Transfer Protocol என்ற மென்பொருளின் உதவியோடு HTML அதாவது Hyper Text Markup Language என்ற மொழியில் எழுதப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் கணினியின் வண்ணத்திரையில் அடுக்கப்படுகின்றன. கணினியில் மிக வேகமாக வேலை நடைபெருவதால் நமக்கு கிளிக் செய்தவுடனேயே தகவல்கள் நமது வண்ணத்திரையில் வந்து விட்டது போல் தோன்றுகின்றது. இவ்வாறு கணினிகள் இணையத்தில் தகவல்கள அனுப்பும் வேகம், Bytes per Second (BPS) என்ற அலகால் குறிக்கப்படுகின்றது அஃதவது ஒரு வினாடிக்கு எத்தனை எழுத்துக்கள் என்பது போன்று. சாதாரனமாக இது வினாடிக்கு 56 KB (Kilo bytes) என்ற வேகத்தில் அதாவது வினாடிக்கு தோராயமாக 56000 எழுத்துக்கள் என்ற வேகத்தில் இருக்கும்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Back